செவ்வாய் கிழமை கடன் அடைக்கலாமா

செவ்வாய் கிழமை கடன் அடைக்கலாமா - தற்போதைய நடைமுறை வாழ்வில் கடன் என்பது அனைவருக்குமே பெரிய சுமையே. ஒரு சில விசயங்கள் கூட கடன் இருப்பதால் செய்ய முடிவதில்லை. அப்படி இருக்கும் நேரத்தில் கடன் எவ்வாறு அடைப்பது போன்ற கேள்விகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதனை எப்படி கையாள்வது அல்லது எந்த நேரத்தில் கொடுத்தால் மொத்த கடன்களும் தீரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அதேபோல் கடன் வாங்கலாமா அல்லது கடன் கொடுக்கலாமா என்பது பற்றியும் பார்க்கலாம்.

வாரத்தின் மூன்றாம் நாளாக இந்த செவ்வாய்க்கிழமை இருக்கிறது. இதில் மக்களுக்கு ஒரு பொதுவான கருத்து ஒன்று எப்போதுமே உள்ளது. அது என்னவென்றால் கடனாக இருக்கட்டும் அல்லது எந்த வித பணமாக இருக்கட்டும் செவ்வாய் கிழமை கொடுக்க வேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால் செவ்வாய் நாளில் வாங்கிய கடன்கள் முழுவதும் தீரும் என்பதே உண்மை. அதே மாதிரி இந்த நாட்களில் கடன்கள் வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது.

கடன் பிரச்சனை முழூவதும் விலக

இதில் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் கொடுத்தால் முழுவதுமாக வாங்கிய கடனை அடைக்க முடியும் என்றே சொல்லலாம். செவ்வாய் ஓரையானது செவ்வாய்க்கிழமைகளில் நான்கு முறை வருகிறது. அதில் இரண்டு முறை பகலிலும் மற்ற இரண்டு ஓரைகள் இரவிலும் வருகிறது. இந்த நாளில் வரக்கூடிய ஓரைகள் மற்றும் அதன் நேரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

செவ்வாய் கிழமை கடன் அடைக்கலாமா


நேரம்

1. காலை - 06 முதல் 07

2. மதியம் - 01 முதல் 02

3. இரவு - 08 முதல் 09

4. அதிகாலை - 03 முதல் 04.

செவ்வாய் ஓரை நேரம் 2023