சம்மத பத்திரம் மாதிரி ( sammatha pathiram in tamil pdf download ) - இதனை நாம் Ratification deed format என்றும் அழைக்கலாம். சம்மத பத்திரத்தினை பற்றி ஏராளம் மக்கள் இன்று வரை தெரியாமல் உள்ளனர். பல சிக்கல்கள் அல்லது பத்திரத்தினால் ஏற்படும் குளறுபடிகளுக்கு இது ஒரு தீர்வு ஆகும். இதனை பற்றி தெள்ளத்தெளிவாக கீழே உள்ள பத்தியில் காணலாம்.
இதையும் பார்க்க: Tamilnilam
இதில் அதிகமாக பிரச்சனை ஏற்படக்கூடிய பரிமாற்றம் என்னவென்றால் அது கூட்டுச்சொத்தில் வாரிசுகளை மறைத்து அதனை மூன்றாம் நபர்களுக்கு கிரையம் செய்து கொடுப்பது ஆகும். அதாவது ஐந்து அல்லது ஆறு வாரிசுகளுக்கு உரிமை உள்ள சொத்தினை ஐந்து பேர் மட்டும் அதனை விற்க முயன்று அதனை கிரையம் செய்து கொள்வார்கள். மீதமுள்ள ஒரு நபர் என்றாவது தெரியவந்து அந்த சொத்தின் மீது வழக்கு போடாமல் இருக்க அவரிடம் சம்மதம் வாங்கி அதற்கொரு பத்திரம் எழுதுவதே சம்மத பத்திரம் ஆகும்.
பாதிக்கப்பட்ட நபர் பின்னாட்களில் பிரச்சனை ஏதும் வராமல் இருக்க மீதமுள்ள ஒரு சொத்தின் உரிமையாளரிடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சம்மத பத்திரம் வாங்கினால் போதுமானது. இது கிரையம் மட்டுமல்லாமல் பவர் பத்திரத்திற்கு பொருந்தும்.
இதையும் பார்க்க: Patta Chitta EC