ரத சப்தமி 2025 தேதி ( ratha saptami 2025 date in tamil ) - சப்தமி என்றால் ஏழு என பொருள் என சென்ற பதிவில் பார்த்தோம். மாத மாதம் எப்போதும் வருகின்ற இந்த திதியை தேய்பிறை அல்லது வளர்பிறை திதி என்றழைப்போம். தை மாதம் வருகின்ற திதியை மட்டும் நாம் ரத சப்தமி என்றழைக்கிறோம். மற்ற 24 அல்லது 25 சப்தாமி திதிகளில் விரதம் மேற்கொள்ளாதவர்கள் கண்டிப்பாக இந்த திதியில் விரதம் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.
இந்த நாள் சூரியனின் பிறந்தநாள் என்றழைக்கப்படுகிறது. மேலும் இந்த நாள் வசந்த காலத்தினை குறிக்கும் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் இந்த தினத்தில் சூரிய பகவான் பூட்டிய ரதத்தினை வடக்கு பக்கம் நோக்கி பயணிப்பார். இந்த ரதத்தில் ஏழு வகையான குதிரைகளும் அடங்கியிருக்கும். இந்த ஏழு குதிரைகள் வாரத்தில் உள்ள ஞாயிறு முதல் சனி வரையிலான காலங்களாகும். இதில் ஞாயிறு சூரியனின் தினமாக கருதப்படுகின்றது. ரதத்தில் உள்ள 12 சக்கரங்களும் 12 ராசிகளை குறிக்கும். அருள்மிகு திருப்பதி கோவிலில் இந்த விழாவானது வெகு சிறப்பாக நடைபெறும்.
பல்லி விழும் பலன்
வழிபாடு
இந்த நாளில் சூரிய நமஸ்காரம் செய்து சாமிக்கு தீப ஆராதனை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்ற இந்த திதி மிகவும் விசேஷமாகும். இந்த நாளில் வணங்குவதன் மூலம் அரசு வேலை, சொந்த வீடு மற்றும் சொந்த நிலம் கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும் நமது பாவங்களை போக்க தலையின் மேல் ஏழு எருக்க இலைகளை கொண்டு நீராட வேண்டும்.
பிறந்த கிழமையில் மொட்டை அடிக்கலாமா
ரத சப்தமி பிப்ரவரி 04, 2025
தை அமாவாசைக்கு பிறகு ஏழாவது நாளில் அதாவது பிப்ரவரி மாதம் செவ்வாய்க்கிழமை 04 ஆம் நாளில் இந்த திதியானது வருகிறது. தொடங்கும் நேரம் காலை 04.37 ( 04 ஆம் நாள் ) மற்றும் முடிவடையும் நேரம் 02.30 ( 05 ஆம் நாள் விடியற்காலை ).
அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்