பொதுப்பணித்துறை அமைச்சர் 2024 தமிழ்நாடு யார் - பொது பணி துறையை ஆங்கிலத்தில் public works department ( PWD ) என்றழைக்கலாம். இந்த துறையானது மிகவும் பழமையான துறைகளில் ஒன்று. இது கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் மேலாக செயல்படுகிறது. முதன்முதலில் 1800 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டாலும் நடைமுறைக்கு 1858 ஆம் ஆண்டு தான் வந்தது. அப்போது தான் இதனை தான் அரசுடமை செய்தார்கள். மேலும் ஆரம்பக்காலகட்டத்தில் நீர்வளத்துறையும் இதுவும் ஒன்றாக தான் செயல்பட்டு கொண்டு வந்தது. நாளடைவில் இரண்டும் தனித்தனியாக செயல்பட்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அமைச்சர்கள் நியமனம் செய்தார்கள்.
நோக்கம் மற்றும் பணிகள்
இதன் அடிப்படை நோக்கமே கட்டிடங்களை பராமரித்தல், கட்டுமானங்கள் பராமரித்தல், கட்டிடக்கலை மற்றும் நினைவுச்சின்னங்களை உருவாக்குதல் போன்றவைகள் ஆகும். மேலும் அரசுத்துறை கட்டுமான பொதுத்துறை கட்டிட பாலங்கள், சாலைகள், தீயணைப்பு மீட்பு பணிகள், வாடகை சான்று, நெடுஞ்சாலை துறை, மணல் தரம் ஆராய்தல், கரும்பு பயிர் மேம்பாடு மற்றும் சிறு துறைமுகங்களை மேம்படுத்துதல் போன்றவையெல்லாம் முக்கியமான பணிகளாகும்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் 2024 யார்
தற்போதைய பொது பணி துறையில் அமைச்சராக இருப்பவர் மாண்புமிகு திரு. எ. வ. வேலு அவர்கள் தான். இவர் திருவண்ணாமலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உள்ளாட்சி துறை அமைச்சர் 2024