போலி பத்திரப்பதிவு அரசு சட்டம் - போலியாக ஆவணங்கள் தயாரித்து அதனை பதிவு செய்வதன் மூலம் உண்மையான உரிமையாளர் பாதிக்கப்படுகிறார். இதனால் அரசுக்கு பல்வேறு நட்டங்கள் மற்றும் சொத்தின் உரிமையாளருக்கு பிரச்சனையே. இதனை கருத்தில் கொண்டு பத்திரப்பதிவு துறை தலைவர் அவர்கள் 10.06.2023 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அது என்னவென்றால் பதிவு சட்டம் 1908 பிரிவு 77ஏ மற்றும் 77பி சட்ட திருத்தத்தின் படி மாவட்ட பதிவாளர்கள் மோசடியில் ஈடுபட்ட நபர்களும் உண்மையான உரிமையாளரையும் நேரில் விசாரணை செய்ய வேண்டுமென்றும் அதே சமயத்தில் அதனை ரத்து செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: Tamilnilam
பாதிக்கப்பட்ட நபர் முதலில் மனு எழுதி மாவட்ட பதிவாளருக்கு கொடுக்க வேண்டும். அதில் சொத்தின் விவரங்கள் என அனைத்தையும் குறிப்பிட வேண்டும். உண்மை தன்மை அறியப்பட்டால் மூன்று மாதங்களுக்குள்ளாகவே அந்த பத்திரம் போலி என ஈசியில் ஏறிவிடும்.
இதையும் படியுங்க: EC Patta