PATTA MARUTHAL STATUS

Patta maruthal status online application tamilnadu ( பட்டா மாறுதல் status ) - ஒரு நில உரிமையாளரிடம் இருந்து மற்றொரு நில உரிமையாளருக்கு மாறுதல் செய்வதே பட்டா மாறுதல் ஆகும். அதாவது ஒரு நில உரிமையாளர் நேரடியாக தானமோ, செட்டிலோ, கிரயமோ அல்லது வேறு ஏதோ வழியிலோ பதிவு செய்யும்போது அந்த இடத்தில் நில உரிமை மாற்றம் செய்ய வேண்டும் அல்லது வாரிசுரிமை அடிப்படையில் மாறுதல் செய்வார்கள். அது பதிவுத்துறையிலும் வருவாய்துறையிலும் மாற்றம் செய்ய வேண்டும்.

Patta maruthal status


தமிழ்நாடு அரசு இந்த பட்டா மாறுதலை வருவாய்துறையில் மட்டுமே செய்தார்கள். நாளடைவில் ஆன்லைனில் செய்யும்முறை வந்து விட்ட காரணத்தினால் மக்கள் வீட்டிலும் அல்லது பொது இ சேவை மையத்திலும் TamilNilam வெப்சைட் மூலமாக செய்யலாம்.

இந்த பட்டா மாறுதல் செய்யும் முன்னர் தகுந்த ஆவணங்களை Tamilnilam இணையத்தளத்தில் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும்போது உங்களுக்கு விண்ணப்ப Id ஒன்றை கொடுப்பார்கள். அந்த விண்ணப்ப Id யை வைத்து உங்கள் பட்டா மாறுதல் status யை தெரிந்து கொள்ளலாம்.

Eservices