பட்டா மாறுதல் செய்ய தேவையான ஆவணங்கள்

பட்டா மாறுதல் செய்ய தேவையான ஆவணங்கள் ( what are the documents required for patta name transfer in tamil nadu ) - முதலில் பட்டா மாற்றம் என்பது என்ன பற்றி பார்க்கலாம். பட்டா மாற்றம் என்பது ஒரு நில உரிமையாளர் பெயரில் இருந்து மற்றொரு நில உரிமை பெயரை சேர்ப்பது ஆகும். உதாரணமாக ஒருவர் ஒரு பட்டா நிலத்தை வாங்குகிறார் என்றால் வாங்கும் நபர் பட்டாவில் பெயரை மாற்ற வேண்டும். இதனை தான் பட்டா மாற்றம் என்போம்.

பட்டா மாறுதல் செய்ய தேவையான ஆவணங்கள்


இதனை மாற்ற தமிழ்நாடு அரசாங்கம் தமிழ்நிலம் என்கிற புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பயன்படுத்தி நாமே எளிமையான முறையில் பட்டாவை மாற்றம் செய்து கொள்ள முடியும். இ சேவை மையம் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

இதையும் பார்க்க: பட்டா சிட்டா வரைபடம்

ஆவணங்கள் மற்றும் நகல்கள்

1. தற்போது இருக்கும் பத்திரத்தின் நகல்

2. மூல பத்திரத்தின் நகல்

3. வில்லங்க சான்றிதழ்

4. ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை

5. புகைப்படம்

6. தற்போது உள்ள கணினி சிட்டா.

மேலே உள்ள ஐந்து ஆவணங்களும் ஆன்லைனிலேயே நம்மால் எடுத்து கொள்ள முடியும். இதனை இ சேவை மையத்தில் அப்ளை செய்தால் விண்ணப்ப எண் மற்றும் அதன் நகல் ஒன்றை கொடுப்பார்கள். அதனை எடுத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கலாம். அவர் அதனை சரிபார்த்த பின் தாசில்தாருக்கு அனுப்புவார். அவரும் அதனை சரிபார்த்த பின்பு உங்கள் பட்டா பெயர் மாறி விடும். ஒருவேளை பெயர் மாறினால் அதனை ஆன்லைனில் ஏற்றிவிடுவார்கள்.

இதையும் பார்க்க: பட்டா பெயர் பார்க்க

குறிப்பு

இ சேவை மையத்தில் பட்டா மாறுதலுக்கு அப்ளை செய்த பின்னர் கொடுக்கும் விண்ணப்ப சீட்டு VAO விடம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பதில்லை. ஒருவேளை உங்களுக்கு மாறுதல்கள் தாமதம் ஆனால் இதனை எடுத்து கொண்டு செல்லலாம். அவர் அந்த ஒப்புகை சீட்டினை கொண்டு உங்கள் பட்டா மாறுதல் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது அல்லது ஏதாவது தவறுகள் இருந்தால் உங்களிடம் கூறிவிடுவார். ஒருவேளை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் காரணங்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் அடுத்த முறை விண்ணப்பிக்கும் போது தவறுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இதையும் பார்க்க: பட்டா எப்படி இருக்கும்