பட்டா எண் அறிவது எப்படி

பட்டா எண் அறிவது எப்படி - பட்டா என்பது ஒரு நில உரிமையாளர் இன்னார் என்பதனை குறிக்க உதவும் ஆவணம் தான் பட்டா. இதனை தற்போது ஆன்லைனில் எடுக்கும் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் பட்டா எண் தெரியவில்லை என்றாலும் எளிமையாக எடுத்து கொள்ளலாம்.

பட்டா எண் அறிவது எப்படி

பட்டா எண் தெரியவில்லை என்றால் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் போதுமானது. இந்த சர்வே எண்கள் நிலங்களின் எண்களை குறிப்பதாகும். சர்வே எண்ணும் தெரியவில்லை என்றாலும் பட்டாவின் உரிமையாளர் பெயர் தெரிந்தாலே போதுமானது.

TamilNilam

அப்படி பட்டா உரிமையாளர் பெயர் போட்டு நீங்கள் Eeservices என்கிற வெப்சைட்டில் செக் செய்வதாக இருந்தால் ஒரு அரை மணி நேரமானது ஆகும். ஏனெனில் ஒரு பெயரில் நிறைய இருக்கும் என்பதால் சற்று நேரம் எடுக்க கூடும்.

Eservices.tn.gov.in patta chitta

சர்வே எண் அல்லது பெயரை வைத்து உள்ளே சென்று விட்டால் பட்டா நகல் தோன்றும். அதில் நில உரிமை விவரங்களுக்கு கீழேயே பட்டா எண் கொடுக்கப்பட்டு இருக்கும். மூன்று அல்லது நான்கு எண் கொண்டதாக இருக்கும்.

EC Patta