பட்டா சிட்டா புலப்படம் download ( patta Chitta Fmb Map Online ) - பட்டா அல்லது சிட்டாவை ஆன்லைனில் எடுக்கும் வசதியை தமிழ்நாடு அரசாங்கம் கொண்டு வந்தது. யூ டி ஆர் க்கு பின்னர் வந்த அனைத்து பட்டா ஆவணங்களையும் கணினி மயமாக்கப்பட்டது கூடுதல் பலம். ஏனெனில் ஒரே ஒரு நிமிடத்தில் நாம் நம்முடைய அல்லது ஒட்டுமொத்த கிராமத்தில் உள்ள அ பதிவேடு உதவி இல்லாமல் பார்க்க இயலும்.
புலப்படம் என்கிற வார்த்தையை Field Measurement என ஆங்கிலத்தில் கூறலாம். பட்டாக்களில் என்னென்ன நிலம், அளவை என்று இருந்தாலும் புலப்படம் என்பது அவசியமாகிறது. ஏனெனில் புலப்படம் வைத்து தான் நாம் சரியான நிலத்தின் அளவுகள் தெரிந்து கொள்ள முடியும்.
இதையும் படிக்க: பட்டா நகல் பெறுவது எப்படி
மேற்கண்ட புலப்படம் சதுரமாகவும் செவ்வகமாகவும் இருக்காது. ஆனால் நாம் நேரில் பார்க்கின்ற நிலங்கள் சதுரம் அல்லது ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கும். ஆனால் புலப்படத்தை வைத்து பார்த்தால் ஒரு வடிவமாக இருக்காது.