பத்திர பதிவு தடை மனு அல்லது தடங்கல் மனு கட்டணம் - ஒருவர் நம்முடைய சொத்தினை அபகரிக்க முயற்சிக்கிறார் அல்லது பூர்வீக சொத்தினை நமக்கு தெரியாமல் விற்க நேர்ந்தால் அல்லது நமக்கு எப்படியோ தெரியவருமேயானால் அப்போது பத்திர பதிவு தடை மனுவினை நாம் சார் பதிவாளர் அவர்களிடம் கொடுக்கலாம். இந்த மனுவினை அவர் விசாரணை செய்ய தடை மனு செய்த மனுதாரரை நேரில் வர சொல்லுவார். வரும்போது அனைத்து ஆவணங்களும் சரியானதாகவும் மற்றும் ஒரிஜினல் எடுத்து வர வேண்டும்.
தடை மனு எழுதும்போது பதிவு தபால் ஒப்புகை முக்கியமாகும். வழக்கம்போல் அனுப்புனர், பெறுநர் போட வேண்டும். பொருளில் பட்டா எண், சர்வே எண், உட்பிரிவு எண் இருந்தால் அந்த எண் கொடுக்க வேண்டும். மேலும் இணைப்பு ஆவணங்களாக தாய் பத்திரம், பூர்வீக சொத்து என்றால் வாரிசு சான்றிதழ் அடையாள சான்று, 1975 முதல் இப்போது வரையிலான வில்லங்கம், வருவாய்துறையின் பட்டா நகல்கள் எழுதும் மனுவில் கொடுக்க வேண்டும்.
இதையும் பார்க்க: Tamilnilam
எழுதப்படும் மனுவில் உங்களுக்கு இந்த சொத்து எப்படி வந்தது என தெள்ளத்தெளிவாக குறிப்பிட வேண்டும். பதிவு சட்டம் 1908 பிரிவு 71 உட்பிரிவு 1 யை பயன்படுத்தி சார் பதவிவாளர் அவர்கள் இரண்டாம் புக்கில் தடை மனு விவரங்களை எழுதி கொள்வார். இதனை பதிவு செய்ய மறுப்பதும் ஏற்றுக்கொள்வதும் சார் பதிவாளர் எடுக்கும் முடிவே ஆகும்.
இதையும் பார்க்க: EC Patta