பத்திர பதிவு சட்டம் 22A மற்றும் 22B Pdf

பத்திர பதிவு சட்டம் 22A மற்றும் 22B Pdf ( Judgement on section 22a registration act tamil nadu pdf in tamil ) - பத்திர பதிவு துறை அவ்வப்போது அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் வெளியிடுகின்றன. இது பதிவுத்துறையில் வேலை செய்யும் அதிகாரிகளுக்கும், பதிவாளர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொருந்தும்.

இதையும் பார்க்க: www.tnreginet.net guideline value 2024

போலி பதிவு ஆவணம் சமீபகாலமாக அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனை முற்றிலும் கட்டுப்படுத்த அரசு அவ்வப்போது கடும் சட்டம் கொண்டு வருகின்றது. அந்த வகையில் 22 A மற்றும் 22 B கடந்த அக்டோபர் 2022 ஒரு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது.

பத்திர பதிவு சட்டம் 22A மற்றும் 22B


22A மற்றும் 22B போலியான ஆவணமாக கருதப்படும் மனைகள் அல்லது பதிவுகள்

1. நகர்ப்பகுதிகளில் உள்ள நிலங்கள், கிராம பஞ்சாயத்திற்கு கீழ் உள்ள நிலங்கள் மற்றும் சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட அரசு நிலங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அரசு நிலங்களுக்கு போலியான பத்திரம் தயாரித்து இருந்தால் அது போலியான ஆவணமாகும்.

2. கிரையம் பெற்ற நபருக்கு அல்லது சொத்தின் உரிமையாளர் சொத்தை அவருக்கே தெரியாமல் பதிவு செய்வது போலியான ஆவணமாக கருதப்படும்.

இதையும் பார்க்க: நத்தம் பட்டா அரசாணை

3. ஏற்கனவே போலியான ஆவணம் என்று அரசால் எழுதப்பட்ட ஆவணம் தெரிந்தும் மறுபடியும் அதற்கு ஆவணம் தயாரித்து பதிவு செய்தல்.

4. வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் வாரிசு சான்றிதழ் போலியானதாக இருந்து பத்திரம் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதுவும் போலியான ஆவணமாக கருதப்படும்.

5. 20.10. 2016 பிறகு அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்திருந்தால் அந்த பதிவும் போலியானது.

இதையும் பார்க்க: Natham Poramboke land patta online