பந்தி பரிமாறுவது போல் கனவு உணவு - பந்தி என்பது ஒரு விசேஷ நாட்களில் அல்லது சுப காரியங்கள் நிறைந்த ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் மக்கள் அனைவரும் கூடி சாப்பிடுவது பந்தியாகும். முதல் கூட்டத்தில் சாப்பிடுபவர்களுக்கு முதல் பந்தி என்றும் இரண்டாம் கூட்டத்தில் சாப்பிடுபவர்களுக்கு இரண்டாம் பந்தி என்றும் கூறுவர். இப்படியே பந்திகள் ஒவ்வொன்றாக அடுக்கி கொண்டே போகலாம். தற்போது இந்த மாதிரி பந்திகள் பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை. காரணம் நேரமின்மை மற்றும் இதர காரணங்களுக்காக அதனை தவிர்த்து விட்டு செல்கின்றனர்.
பந்தியில் பரிமாறுவது என்பது சாப்பிடுவதற்கு மக்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்களுடைய இலையில் நீங்கள் சாப்பாடு அல்லது இதர உணவுகளை அவர்களுக்கு பரிமாறுவீர்கள். இதனை தான் பந்தியில் பரிமாறுவது ஆகும். பொதுவாகவே இந்த வகை கனவுகளை நீங்கள் கண்டதன் மூலம் செய்யும் காரியங்களை மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தவே இது வருகிறது எனலாம்.
இதையும் படியுங்க: கோவிலில் அன்னதானம் சாப்பிடுவது போல் கனவு