பைமாஸ் எண் என்றால் என்ன | பைமாஷ் ஆவணங்கள்

பைமாஸ் எண் என்றால் என்ன, பைமாஷ் ஆவணங்கள், ஜமீன் பைமாஸ், பைமாஷ் நம்பர் டு சர்வே நம்பர் ( paimash land to survey number in tamil ) - இப்போது இருக்கும் நவீன காலகட்டங்களில் ஒரு நிலத்தை சர்வே செய்ய முக்கோணவியல் விதியை பயன்படுத்தி அளக்கப்படுகின்றன. 70 மற்றும் 80 வருடங்களுக்கு முன்னர் ஒரு நிலத்தை அளக்க சதுர வடிவம் தேவைப்பட்டது. அதாவது 420 சதுர மீட்டர் அளவாக ஒவ்வொரு நிலங்களை அளப்பர். அப்படி அளந்த நிலங்களுக்கு ஒரு எண் தேவைப்பட்டது. அது தான் பைமாஷ் எண்.

பைமாஸ் எண் என்றால் என்ன


பைமாஷ் நம்பர் டு சர்வே நம்பர்

நடைமுறையில் சர்வே எண் என்றும் செட்டில்மென்ட் காலத்திற்கு முன் பைமாஷ் எண் என்றும் அழைக்கப்பட்டது. இந்த பைமாஷ் எண் கொண்ட நிலங்களை செட்டில்மென்ட் காலங்களுக்கு பின்னர் சர்வே நிலங்களாக மாற்றினர்.

இதையும் பார்க்க: அனுபவ பாத்தியம் என்றால் என்ன

பைமாஷ் ஆவணங்கள்

தற்போது பைமாஷ் எண் கொண்ட சர்வே நிலமும் பிரச்சனைக்கு வருகிறது. அதாவது பைமாஷ் எண்ணும் இப்போது இருக்கின்ற நிலமும் சரியாக இருக்கிறதா என்றும் அல்லது புதிதாக வாங்க போகும் நில சர்வே எண்ணும் பழைய பைமாஸ் எண்ணும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்த ஆவணங்கள் வேண்டுமென்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று மனு கொடுத்து பெற்று கொள்ளுங்கள்.

இதையும் பார்க்க: பவர் பத்திரம் என்றால் என்ன