பாட்டி விடுகதைகள்

பாட்டி விடுகதைகள் ( Paati vidukathai in tamil ) - நாம் எல்லோரும் நிச்சயமாக பாட்டி சொன்ன விடுகதைகளை கேட்டு இருப்போம். அது சற்று சிந்திக்கும்படியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்ற மாதிரி இருக்கும். இதனால் கேட்கும் நமக்கு ஒரு புத்துணர்ச்சியும் ஆர்வத்தையும் எளிதாக இந்த விடுகதைகள் மூலம் நமக்கு பாட்டி சொல்ல வருவார். இங்கே முதலில் கேள்விகள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் விடைகள் கீழே கடைசி பத்தியில் இருக்கும்.

பாட்டி விடுகதைகள்


1. கிணற்று நிறைய தண்ணீர் இருக்கும். குருவி குடிக்க தண்ணீர் இல்லை.

2. எள்ளுக்கும் சிறு தலை என்ன தலை.

3. வந்தால் கொண்டாட்டம் வராவிட்டால் திண்டாட்டம்.

4. கை இருக்கு பிடிக்க முடியாது, கால் இருக்கு நடக்க முடியாது.

5. இரவல் கிடைக்காதது இரவில் கிடைப்பது.

6. ஊரை சுமந்தபடி உயரத்தில் பறப்பான்.

7. வாரி வாரி வழங்குவான். வெளிச்சம் அதை வாங்கத்தான் ஆளில்லை. அவன் யார்?

8. மரத்துக்கு மரம் தாவும் குரங்கு அல்ல பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல அவன் யார்?

9. மழையில் பூக்கும் பூ.

10. பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன். அவன் யார்?

விடைகள்

தேங்காய், விடத்தான் தலை, மழை, நாற்காலி, தூக்கம், விமானம், மின்னல், அணில், குடை, நன்றியுள்ள நாய்.

இதையும் படியுங்க: மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்