நத்தம் வீட்டுமனை பட்டா பெறுவது எப்படி

நத்தம் வீட்டுமனை பட்டா பெறுவது எப்படி - பொதுவாக நத்தம் என்றால் மனிதர்கள் வாழும் இடத்தினை குறிக்கும். அதில் முக்கியமாக புறம்போக்கு நிலங்களையே சார்ந்து கொண்டதாய் இருக்கிறது. இதனால் பத்திரம் மட்டுமே நத்தம் புறம்போக்கில் வாழும் மக்களுக்கு கிடைக்கிறது. ஆனால் பட்டா என்பது கிடைக்காமலே போகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஏனென்றால் ஒரு வீட்டிற்கு பத்திரமும் பட்டாவும் இருந்தால் தான் அந்த சொத்தானது முழுமையாக அவர்களால் அனுபவிக்க முடியும்.

நத்தம் வீட்டுமனை பட்டா பெறுவது எப்படி


ஒருவர் நத்தம் புறம்போக்கில் 25 ஆண்டுகள் மேலாக வசிக்கிறார். ஆனால் பட்டா வாங்க முடியவில்லை இதற்கு என்ன செய்வது ?

இலவச பட்டா முகாம் வருடத்திற்கு ஒருமுறையாவது உங்கள் நகராட்சியில் வருகிறது. அப்போது நீங்கள் ஒரு மனு எழுதி கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பட்டா முகாமில் கொடுத்தும் வேலை ஆகவில்லை என்ன பண்ணுவது ?

பட்டா வாங்கும் நபர் ஆனவர், நீங்கள் எத்தனை வருடங்கள் வசிக்கிறீர்கள் என வீட்டு வரி ரசீது, குடிநீர் வரி, மின் கட்டண ரசீது மற்றும் ஆதார்,  ஸ்மார்ட் கார்டு போன்றவைகள் எல்லாம் ஒரு நகலாய் எடுத்து மனு பின்னாடி இணைத்து வட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும். வட்டாச்சியர் என்ன செய்வார் என்றால் கிராம நிர்வாக அலுவலகர், Revenue Inspector மற்றும் சர்வேயர் இடம் இந்த பொறுப்புகளை ஒப்படைப்பார்.

கிராம நிர்வாக அலுவலகர் நேரில் சென்று விசாரித்து அந்த இடம் நத்தம் புறம்போக்கா அல்லது அரசாங்கம் பிற் காலத்தில் அந்த இடத்தில் ஏதாவது அசைன்மென்ட் கொண்டு இருக்கிறதா என்று செக் செய்து revenue inspector இடம் கூறுவார். அவரும் சேர்ந்து இந்த இதர பணிகளை தொடருவார். 

கடைசியாக சர்வேயர் அந்த இடத்தில் ஒரு FMB ஸ்கெட்ச் ஒன்றை போடுவார். மொத்தமாக எல்லாம் செக் செய்து மறுபடியும் வட்டாட்சியரிடம் இது செல்லும். பிறகு அவர் உங்களுக்கு பட்டா வழங்குவார். இந்த ப்ரோஸஸ் எல்லாம் மாத கணக்கில் இழுக்கும் காரணத்தினால் மக்கள் சற்று பொறுமை காத்து இருத்தல் நல்லது.

பட்டா சிட்டா

நீர்நிலை புறம்போக்கு

Eservices