முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு, உயர்கிறது என்றால் என்ன ( வில்லை கட்டணம் ) - பதிவுத்துறையில் முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணங்கள் அரசுக்கு வருவாயாக உள்ளது. தமிழ்நாட்டில் 21 சதவீதம் முத்திரை தீர்வையில் இருந்து மட்டும் வருவாயாக வருகின்றது. கூட்டு சங்கங்கள், வணிக சங்கங்கள், சொத்து, நிறுவனங்கள் என அனைத்திற்கும் முத்திரை தீர்வை மிகவும் அவசியமாகும்.
2001 லிருந்து 2023 வரையிலான காலங்களில் முத்திரை தீர்வை கட்டணம் எந்த வித மாற்றம் செய்யவில்லை. மேலும் வருடத்திற்கு மட்டும் சுமார் 42 கோடி ரூபாய் அச்சிடும் செலவாகிறது என்று மாண்புமிகு அமைச்சர் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
இதையும் பார்க்க: வருவாய் துறை அமைச்சர் பெயர் 2024
65 வகையிலான முத்திரைத்தாள் இருந்தாலும் அதில் 15 வகை மட்டும் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாரிசு அடிப்படையில் சொத்தினை பரிமாற்றம் செய்தல் 20 லிருந்து 500 அல்லது 1000 ரூபாயும், உறுதிமொழி பத்திரம் 20 லிருந்து 200 ரூபாயும், சொத்து பரிமாற்றம் 20 லிருந்து 200 ரூபாயும், அடமான பத்திரத்திற்கு 100 லிருந்து 500 ரூபாயும், கூட்டு நிறுவனம் மற்றும் சங்கங்களில் 5 முதல் 10 லட்சத்திற்கு முத்திரைத்தாள் வாங்கினால் மேலும் 500 ரூபாய் கட்ட வேண்டும்.
இதையும் பார்க்க: கோவில் நிலம் ஆக்கிரமிப்பு 2024