திருவண்ணாமலை மாவட்டம் ( tiruvannamalai district ) - முதலில் திருவண்ணாமலை வட ஆற்காடு மாவட்டத்தில் தான் இருந்தது. 30 செப்டம்பர் 1989 இல் தனி மாவட்டமாக தமிழ்நாடு அரசு அரசாணையை பிறப்பித்து புது மாவட்டமாக அறிவித்தது. இதன் ஆங்கில குறியீடு Tv ஆகும். இதன் பரப்பளவு மட்டும் சுமார் 6191 சதுர மீட்டர் ஆகும். 2011 நிலவரப்படி 24, 64, 875 மக்கள் தொகை உள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பெயர் திரு. முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயர் திரு. பவன்குமார் அவர்களும் உள்ளனர்.
கோட்டங்கள்
1. திருவண்ணாமலை
2. ஆரணி
3. செய்யார்.
நகராட்சிகள்
1. திருவண்ணாமலை
2. ஆரணி
3. திருவந்திபுரம்
4. வந்தவாசி.
பேரூராட்சிகள்
1. போளூர்
2. சேத்துப்பட்டு
3. செங்கம்
4. கண்ணமங்கலம்
5. களம்பூர்
6. தேசூர்
7. கீழ்பெண்ணாத்தூர்
8. பெரணமல்லூர்
9. புதுப்பாளையம்
10. வேட்டவலம்.
இது தவிர 12 வட்டங்கள், எட்டு சட்டமன்ற தொகுதிகள், இரண்டு மக்களவை தொகுதிகள், 1067 வருவாய் கிராமங்கள், 18 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதன் அஞ்சல் குறியீடு 606 601 மற்றும் வாகன பதிவு எண்கள் TN 25 மற்றும் TN 97 ஆகும்.
Home - PattaChitta.Co.in