மேல் நோக்கு நாள் 2024 - நாம் அன்றாடம் உபயோகிக்கும் தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் மற்றும் சமநோக்கு நாள் என்று இருக்கும். உதாரணமாக அன்றைய தினம் மேல்நோக்கி இருந்தால் மேல் குறியீட்டினை குறிப்பிட்டிருப்பார்கள். மற்ற நாட்களுக்கும் அப்படி தான் குறியீடு மூலமாக குறிப்பிட்டார்கள். வானியல் அறிவியல் படி, சூரியனின் இருப்பிடத்தையும் பூமியை சுற்றி வரும் நிலவின் நிலையையும் கொண்டு வரையறுக்கப்பட்டது தான் இந்த மேல், கீழ் மற்றும் சம நோக்கு நாட்கள் ஆகும்.
இவற்றினை நட்சத்திரங்கள் கொண்டு வரையறுக்கப்பட்டார்கள். நமக்கு 27 நட்சத்திரங்கள் இருப்பதை ஏற்கனவே அறிந்ததே. அந்த 27 நட்சத்திரங்களை மூன்று பாகங்களாக பிரித்து ( மேல், கீழ், சம ) என்கிற நாட்களில் சேர்த்து உள்ளார்கள். ஒவ்வொரு நோக்கு நாட்களும் மாதத்திற்கு ஒன்பது, பத்து அல்லது பதினொன்று வீதம் இருக்கும்.
செவ்வாய் ஓரை நேரம்
மேல் நோக்கு நாள் என்றால் என்ன
மேல்நோக்கு நாள் என்பது மேலோங்கி செய்யும் செயலே ஆகும். அதாவது ஒரு செயல்களை நாம் உயர்ந்த இடத்தில் அல்லது பூமிக்கு மேலே செய்வதாகும். உதாரணமாக செடி நடுதல் போன்றவை மேலே செய்யும் வேலையாகும். இதன் நட்சத்திரங்கள் என்று பார்த்தால் ரோகினி, பூசம், திருவாதிரை, உத்திராடம், உத்திரம், அவிட்டம், திருவோணம், சதயம் மற்றும் உத்திரட்டாதி ஆகும்.
மனையடி சாஸ்திரம் அடி கணக்கு
மேல் நோக்கு நாளில் என்ன செய்யலாம்
1. மதில் சுவர்
2. கொடி நடுதல்
3. வாசல் நிலை
4. கொட்டைகை அமைத்தல்
5. பூமிக்கு மேலே செய்யக்கூடிய விஷயங்கள்.