மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை - உயிர் எழுத்திற்கு அடுத்தபடியாக மெய் எழுத்துக்கள் முதன்மையான எழுத்துக்களாக வருகின்றன. க் முதல் ன் வரையிலான மொத்தமாக 18 எழுத்துக்களை கொண்டுள்ளது. மெய் எழுத்துக்களை எத்தனை வகையாக பிரிக்கலாம். அவைகள் வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் ஆகும். பொதுவாகவே இதனை புள்ளி எழுத்துக்கள் என்ற வரிசையில் நாம் நினைவில் கொள்ள முடியும்.
வல்லின மெய் எழுத்துக்கள் எத்தனை
வல்லினம் ஆறு வகையான எழுத்துக்களை கொண்டுள்ளது. இதனை உச்சரிக்கும்போது வல்லமையுடன் சொற்கள் உள்ளமையால் வல்லின மெய் எழுத்துக்கள் எனலாம்.
க் - மூக்கு
ச் - பேச்சு
ட் - மூட்டு
த் - சொத்து
ப் - சீப்பு
ற் - குற்றம்
மெல்லின மெய் எழுத்துக்கள் எத்தனை
உச்சரிக்கும்போது இந்த வகையான சொற்கள் மிகவும் மெல்லிய ஓசை கொண்டிருப்பதால் இதனை மெல்லினம் எனலாம்.
ங் - அங்கு
ஞ் - இஞ்சி
ண் - கண்
ந் - அந்த
ம் - ஆம்
ன் - தேடினான்
இடையினம்
வல்லின எழுத்துக்கள் மற்றும் மெல்லின எழுத்துக்கள் மத்தியில் ஒலித்து உண்டாகும் ஓசை இடையின எழுத்துக்கள் எனலாம்.
ய் - வாய்
ர் - கார்
ல்- கால்
வ் - செவ்வாய்
ழ் - யாழ்
ள் - பள்ளி
உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை