மார்கழி திருவாதிரை 2023 தேதி விரதம் நோன்பு - மார்கழி மாதம் கடவுளுக்கு உண்டான மாதம் என்பார்கள். இந்த மாதம் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உகந்ததாக இருப்பதனால் சிவபெருமானை நாம் வணங்கலாம். மேலும் இந்த தினத்தில் ஆருத்ரா தரிசனம், பௌர்ணமி மற்றும் திருவாதிரை இவை மூன்றும் ஒரே நேரத்தில் வருவதால் மக்கள் இதனை தவிர்க்காமல் இறைவனை வழிபட்டால் மிகுந்த நன்மை பயக்கும் என்பதே உண்மை.
மாங்கல்ய நோன்பு 2023
இந்த திருவாதிரை விரதம் பெண்களுக்குண்டானதே என்று சொல்லலாம். மிகுந்த ஆயுள்களோடு இருக்க வேண்டும் என்பதற்காக விரதம் இருப்பார்கள். மேலும் கணவரின் தொழில் மற்றும் வியாபாரம் இவையெல்லாம் நன்றாக செல்ல வேண்டும் என்கிற மற்றொமொரு காரணத்தினாலும் விரதம் மேற்கொள்வார்கள்.
மேலும் அறிய மீன ராசி ஏழரை சனி காலம் 2023
பெண்கள் அன்றைய தினம் தங்களுடைய மாங்கல்யச்சரடுகளை மாற்றி கொள்ளலாம். ஏனெனில் இந்த நாட்கள் வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறை மட்டுமே வரும். மேலும் தாலி சரடு மாற்றும் முன்னர் கணவரிடம் ஆசி பெற்று பின்னர் வேலைகளை தொடங்கலாம்.
வழிபடும் முறை
குல தெய்வம், சிவ பெருமான் மற்றும் விநாயக பெருமான் திருவுருவங்கள் கண்டிப்பாக வேண்டும். இவர்களுக்கு 21 வகையில் காய்கறியுடன் சாப்பாடு, கூட்டு, பொரியல் அதிரசங்கள், களி மற்றும் நெய் விளக்கு என படைக்கலாம். தாலி சரடுகளை முடிந்த அளவு சூரிய உதயத்திற்குள் மாற்றி விட வேண்டும். மேலும் மற்ற விரதங்களை போல் இதற்கும் வெறும் வயிற்றில் தான் இருக்க வேண்டும்.
திருவாதிரை விரதம் 2023 ஜனவரி மாதம்
இந்த விரதம் 05 ஆம் நாளன்றும் விரதம் மேற்கொள்ளலாம். 07 ஆம் தேதியன்று அதிகாலை 12.14 க்கு முடிகிறது.
மேலும் அறிய பூமி பூஜை போட தேவையான பொருட்கள்