மாநகராட்சி ஆணையரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் - முதலில் மாநகராட்சி ஆணையரை ஆங்கிலத்தில் முனிசிபாலிட்டி கமிஷனர் என்று அழைக்கலாம். மேயர் என்பதும் இந்த ஆணையர் என்பவரும் ஒன்றல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டும் ஒன்றே என நினைத்துக்கொள்வார்கள். இவர் மாநகராட்சியின் தலைமை நிர்வாகியாக செயல்படுவார்.
பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகையினை கொண்டு இருப்பது இந்த பெரு நகரம். மேலும் கோடி கணக்கில் வருவாய் தரக்கூடிய இந்த பெரு நகரத்தினை பாதுகாக்க நிறைய அரசு அதிகாரிகளும் தேர்தலில் வெற்றிபெற்று வரும் உறுப்பினர்களும் இருக்கின்றனர். அவற்றினுள் மிகவும் முக்கியமான நபர் தான் ஆணையர் ஆவார். இது மாநகராட்சிக்கு மட்டுமல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பொருந்தும். அதாவது நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கும் ஆணையர்கள் செயல்படுவார்கள்.
தமிழ்நாடு மேற்கு மாவட்டங்கள் பட்டியல்
மாநகராட்சி ஆணையர் பதவி காலம் மற்றும் பணிகள்
இவர் இந்திய ஆட்சி பணியில் ஏற்கனவே பணிபுரிந்தவராக இருக்க வேண்டும். இவரின் மொத்த பதவி காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. இவரின் பதவி காலங்களை உயர்த்துவதற்கு மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உண்டு. இவரின் முக்கியமான பணி என்னவென்றால் நிதி நிலை அறிக்கை தயாரிப்பது, மாநகராட்சி கவுன்சில் மற்றும் உறுப்பினர்களின் பணிகளை மேற்கொள்வது மற்றும் திட்டங்களை செயல்படுத்த அறுவுறுத்துதல் போன்றவைகள் ஆகும்.
தற்போது வரையும் தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில் மும்பை பெரிய நகரமாக செயல்படுகிறது. எப்படி 21 முனிசிபாலிட்டிக்கு ஒவ்வொரு மேயர் இருக்கிறாரோ அதேபோல் தான் ஆணையர்களும் இருப்பார்கள்.
கிராம ஊராட்சி எண்ணிக்கை 2023