உயில் மெய்ப்பித்தல்

உயில் மெய்ப்பித்தல் - உயில் மெய்ப்பித்தல் என்பது ஒரு சொத்தின் உரிமையாளர் அவர்கள் தனக்கு விருப்பமான சொத்தினை எழுதி கொடுப்பது உயில் எனப்படும். ஆனால் எழுதிய நபர் இல்லை என்றால் அதனை உண்மை படுத்த வேண்டும். அதாவது நீதிமன்றத்தில் புரபேட் எனப்படும் மெய்ப்பித்தல் சான்றிதழை பெற்றால் தான் அதனை அனுபவிக்கும் நபர்கள் உரிமை கொண்டாட முடியும்.

உயில் மெய்ப்பித்தல்


உயில் எழுதும் நபர் உயிரோடு இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அவர் இல்லை என்றால் இறுதியாக எழுதிய உயிலை எடுத்து கொள்ள முடியும். அது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் சார் பதிவாளர் அவர்கள் சாட்சியாக கருதமாட்டார். ஆனால் உயிலில் எழுதிய சாட்சிகள் இருவர் நேரில் நீதிமன்றம் வந்து உண்மை தன்மையை சொல்ல வேண்டும்.

இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 69 இன் படி சாட்சி நபர்களும் இல்லை என்றால் அவர்களின் கையொப்பத்தை நிரூபிக்க வேண்டும். அதாவது மற்ற அரசு ஆவணத்தில் உள்ள கையொப்பமும் இந்த உயிலில் போடப்பட்ட கையெழுத்தும் சரியாக இருக்குமாயின் தீர்ப்பு சாதகமாக அமையும். அதே சமயத்தில் உயில் எழுதிய நபரின் கையொப்பம் சாட்சிகளுக்கு எப்படி இருக்கிறதோ அதேபோல் தான் நிரூபித்து காட்ட வேண்டும்.

Home - Patta Chitta