இந்த மாத மின் கட்டணம் ( December 2025 )

இந்த மாத மின் கட்டணம் December 2025 - மின்சாரம் என்பது நமது வாழ்வாதாரத்தின் தேவைகளில் இன்றி அமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதனால் மின்சாரம் பயன்படுத்துவோர்கள் வீதம் அதிகமாகி வருகின்றனர். தனிநபர் மட்டுமில்லாமல் நிறுவனங்களும் இதில் அதிக பங்குங்கள் வகித்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் மின் கட்டணங்கள் வசூலித்த நிலையில் சில ஆண்டுகளாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டணங்களை மக்கள் செலுத்துகின்றனர். இதில் முதலில் உபயோகப்படுத்தும் 100 யூனிட் மின்சாரங்கள் இலவசம் என தமிழக அரசு ஏற்கனவே அரசாணையை பிறப்பித்து அது நடைமுறையில் தற்போது உள்ளது.

இந்த மாத மின் கட்டணம்


தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம்

ஜூலை 2022 மாதத்தில் மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் மீண்டுமொரு மின் கட்டண பட்டியலை தயாரித்து அதனை அதிகாரபூர்வமாக வெளியிட்டார். அதில் முதலில் பயன்படுத்தும் நூறு யூனிட்டுகளுக்கு வழக்கம்போல் இலவசம் என்றும் அதற்குமேல் பயன்படுத்தும் 101 லிருந்து 200 யூனிட்டுகள் வரையும் 27 ரூபாயும், 201 லிருந்து 300 யூனிட்டுகளுக்கும் 72 ரூபாயும், 301 லிருந்து 400 யூனிட்  147 ரூபாயும், 401 லிருந்து 500 யூனிட் வரையும் 298 ரூபாயும், 501 லிருந்து 600 யூனிட் வரையும் 155 ரூபாயும், 601 லிருந்து 700 யூனிட் 275 ரூபாயும், 701 லிருந்து 800 யூனிட் 395 ரூபாயும், 801 லிருந்து 900 வரையும் 565 ரூபாயும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தட்கல் மின் இணைப்பு என்றால் என்ன

குறிப்பு

மேலே குறிப்பிட்டுள்ள கட்டணங்கள் அனைத்தும் மாதத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 200 யூனிட் மாத உயர்வு கட்டணம் 27 என்றால் இரண்டு மாதங்களுக்கு ரூபாய் 56 மற்றும் நீங்கள் உபயோகித்த மின்சார கட்டணம் என இரண்டையும் கட்ட நேரிடும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு