ஏழரை சனி நடக்கும் ராசிகள் 2023 - ஏழரை சனி ஒருவருடைய வாழ்நாளில் எப்போது வேண்டுமென்றாலும் வரும். திருக்கணித பஞ்சாங்கப்படி அல்லது வாக்கிய பஞ்சாங்கப்படி நமக்கு முன்கூட்டியே ஏழரை சனி எப்போது வரும் என்று அறியப்படுகிறது. ஏழரை சனி என்பது அருள்மிகு சனி பகவான் மனிதர்களை சோதிப்பதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக அவரவர் தன் வாழ்நாளில் செய்த நல்லவை, கெட்டவை கர்மா அடிப்படையில் வருகின்றன.
திருக்கணித பஞ்சாங்கப்படி, ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 17 ஆம் நாளும், தமிழ் வருட அடிப்படையில் தை மூன்றாம் நாளில் மாலை 06.05 க்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகின்றனர். மேலும் மீன ராசிக்கு ஏழரை சனி ( முதல் சுற்று ) தொடங்குகிறது. மகர ராசிக்கு மூன்றாம் சுற்றும் கும்ப ராசிக்கு இரண்டாம் சுற்று தொடங்குகிறது.
மீன ராசி ஏழரை சனி காலம் 2023
இதனால் மற்ற ராசிகளுக்கும் பாதிப்புகளும் இருக்கும். அதே சமயத்தில் நல்லதும் நடக்கும். இதில் கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டக சனியும் மற்றும் விருச்சிக ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனியும் ஆரம்பிக்கிறது. இதனால் இவர்கள் பார்த்து செயல்பட வேண்டும்.
ஏழரை சனி நடக்கும் ராசிகள் 2025
ஏழரை சனி இரண்டரை ஆண்டுகள் வீதம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. இதில் மகரம், கும்பம் மற்றும் மீன ராசிகளுக்கு 2025 ஆண்டு வரையும் ஏழரை சனி இருக்கும்.
ராகு காலம் எமகண்டம் 2023