போர் போட உகந்த நாள் 2022

போர் போட உகந்த நாள் 2022

போர் போட உகந்த நாள் 2022 - போர் போட நல்ல நாள் 2022 எதற்காக பார்க்கிறோம் என்றால் நம் வீடு கட்டுவதற்கு அதிகமாக நீர் தேவைப்படுவதற்காகவும் வெளியில் தண்ணீர் விலை அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலும் எங்கும் தண்ணீர் தேடி அலையாவதற்கும் மற்றும் விவசாயம் சம்மந்தப்பட்ட தேவைகளுக்காகவும் போர் போடுகின்றோம். அப்படி இருக்கும்போது நிலத்தடி நீர்மட்டம் மற்றும் அந்த இடத்தில் போர் போட முடியுமா என்று அலசி பார்ப்பார்கள்.

போர் போட உகந்த நாள் 2022


பொதுவாக போர் போட ஆகும் செலவு முதல் முன்னூறு அடிக்கு 75 லிருந்து 85 வரையும் வசூல் செய்யப்படுகிறது. அதற்கு மேல் ஒவ்வொரு அடிக்கும் ரூபாய் 5 முதல் ரூபாய் 10 வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணம் ஊருக்கு ஊர் வேறுபடும். இந்த போர்வேல் அமைக்க ஒரு சிலர் 800 அடி வரையும் குழியை தூர்வாருகிறார்கள். 

போர்வெல் அமைக்க நல்ல நாள் 2022 அல்லது ஆழ்துளை கிணறு அமைக்க நல்ல நாள் 2022 மற்றும் கிணறு தோண்ட நல்ல நாள் 2022

போர்வெல், கிணறு மற்றும் ஆழ்துளை இவை மூன்றுமே நீர்கள் சம்பந்தப்பட்டவைகளாக இருப்பதால் மூன்றும் ஒன்றே என எடுத்துக்கொண்டால் சிறப்பாகும். நீர் கிரகங்கள் நிறைந்த சுக்கிரனில் தான் போர் போட வேண்டும். அதாவது திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் போர் அமைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் வளர்பிறைகளில் மட்டுமே இதனை செய்ய முடியும். இரவு நேரம் என்று பார்த்தால் எட்டு மணியில் இருந்து ஒன்பது மணி வரையும் நல்ல நேரமாக பார்க்க படுகிறது. இதை தவிர்த்து மாதம் வருடம் நாள் இவை கூட்டினால் இரட்டை இலக்க எண் வர மாதிரி பார்த்து கொள்ள வேண்டும். 

குறிப்பு 

இந்த கருத்தானது நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமில்லை மற்றும் அதே தான் செய்ய வேண்டும் என்பதும் இல்லை. மாறாக உங்கள் ஊரில் உள்ள நல்ல ஜோதிடரை அணுகி நாள், வாஸ்து மற்றும் நட்சத்திரம் மற்றும் நேரம் இவைகளை குறித்து கொள்ளுங்கள்.

பங்குனி மாத முகூர்த்த நாட்கள் 2022

மாங்கல்யம் வாங்க நல்ல நாள் 2022