பீமா பட்டா என்றால் என்ன ( B memo land in tamil ) - பட்டாவில் நிறைய நிறைய வகைகள் உள்ளதை நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். இதில் பெரும்பான்மையாக தனி மற்றும் கூட்டு பட்டா மக்களிடத்தில் இருக்கும். ஆனால் அது என்ன பீமா பட்டா. பீமா பட்டா என்பது ஒரு ஆவணம் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழக்கூடியவர்கள் அல்லது ஏதாவது ஒரு நோக்கமாக அங்கேயே குடிபெயர்பவர்களுக்கு பீமா நோட்டீஸ் அரசாங்கம் அனுப்பும். அதாவது அந்த இடத்தில் அதிகமான வருடங்கள் வாழ்ந்து இருந்தாலும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த இடத்தினை கட்டாயம் காலி செய்ய வேண்டுமென அங்குள்ளவர்களுக்கு அரசாங்க தரப்பில் B - memo என்கிற நோட்டிஸ் கொடுத்து வெளியே போக சொல்வார்கள்.
இதையும் படிக்க: TamilNilam
காலப்போக்கில் இந்த வார்த்தை பீமா என மாறியது. அது மட்டும்மில்லாமல் அந்த நோட்டிஸ் பெற்றவர்கள் அது அரசாங்கம் கொடுத்த பீமா பட்டா ஆவணம் என்று குடிபெயர்ந்தார்கள். மேலும் அதனை விற்கவும் செய்தார்கள். இது 1970 காலங்களில் நடைபெற்றது. ஒரு சிலர் தெரியாமல் இந்த இடத்தினை வாங்கி இருந்தால் நிச்சயமாக அரசாங்கமானது எடுத்து கொள்ளும்.
இதையும் படியுங்க: EC Patta