1 ஹெக்டேர் எத்தனை சென்ட் மீட்டர் மா ஏக்கர்

1 ஹெக்டேர் எத்தனை சென்ட் மீட்டர் மா ஏக்கர் சதுர அடி - நில அளவை பொறுத்தவரையில் வித்தியாசமான வார்த்தைகள் நம்மிடையே இன்றளவும் இருக்கிறது. நடைமுறையில் ஒரு சிலருக்கு இந்த வார்த்தைகள் தெரிவதில்லை என்றாலும் முக்கியமான அரசு துறையில் இந்த சொற்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கின்றன.

இதையும் பார்க்க: 1 லிங்ஸ் எத்தனை அடி

முக்கியமாக சொன்னால் பட்டா அல்லது சிட்டா நிலங்களை கணக்கிட அல்லது அளவுகளை ஹெக்டேர் மூலம் அப்டேட் செய்திருப்பார்கள். ஆனால் புழக்கத்தில் நாம் உபயோகப்படுத்தும் வார்த்தை என்னவென்றால் சென்ட், கிரவுண்ட், சதுர அடி, சதுர மீட்டர், ஏக்கர் மட்டுமே. இந்த ஹெக்டேர் வார்த்தையை நாம் பட்டாக்கள் மற்றும் சிட்டாக்கள் மூலமே காண முடியும்.

1 ஹெக்டேர் எத்தனை சென்ட் மீட்டர் மா ஏக்கர்


பொதுவாகவே நம் வீட்டு பட்டாக்களில் உள்ள ஹெக்டேர் அளவுகளை எப்படி கண்டுபிடிப்பது பற்றி பார்ப்போம். இதில் குறிப்பிடப்படும் ஹெக்டேர் அளவுகளானது மெட்ரிக் முறையை சேர்ந்தது ஆகும். இன்றளவும் பத்திரங்களில் எழுதப்படவில்லை என்றாலும் நிலத்தின் ஆதாரமாக உள்ள சிட்டா மற்றும் பட்டாவில் உள்ளது.

1 சதுரம் எத்தனை square feet

எடுத்துக்காட்டு 1

பெருமளவில் சிட்டாவில் பரப்பு (ஹெக்டேர் - ஏர்) இல் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை எப்படி சென்ட் கணக்கிற்கு மாற்றுவது ?

உதாரணமாக பரப்பு ( 0 - 5.50 ) என்று குறிப்பிட்டு இருந்தால் அதனை 5.50 பெருக்கல் 2.47 செய்தால் வரும் விடை தான் சென்ட்.

எடுத்துக்காட்டு 2

நத்தம் சிட்டாவில் சதுர மீட்டரில் குறிக்கப்பட்டு இருக்கும். அதனை எவ்வாறு சென்டிற்கு கன்வெர்ட் செய்வது ?

உதாரணமாக ஒருவரின் நிலத்தின் பரப்பு 00080 இருந்தால் அதனை 40 ஆல் வகுக்க கிடைக்கும் மதிப்பு சென்ட் ஆகும்.

கிராமத்தில் வீடு கட்ட விதிமுறைகள்