அ பதிவேடு திருத்தம் அ பதிவேடு Fmb, அ-பதிவேடு விவரங்களை சரிபார்க்க - அ பதிவேட்டினை ஆங்கிலத்தில் A Register என்று அழைப்பார்கள். அ பதிவேடு என்பது ஒரு கிராமத்தின் அல்லது நகரத்தின் ஒட்டுமொத்த பதிவேடு ஆகும். அதாவது கிராமத்தில் உள்ள அனைத்து பட்டாக்களின் தொகுப்பு, சர்வே எண்கள், நஞ்சை, புஞ்சை, மானாவாரி மற்றும் மற்ற நிலங்களின் வகைப்பாடுகள், கிணறு, ஏரி, குளம், குட்டை ( நீர்நிலை ) மற்றும் இதர அனைத்து விஷயங்களையும் மிகவும் துல்லியமாக பதிவேற்றக்கூடிய ஆவணம் தான் இந்த அ பதிவேடு ஆகும்.
இந்த அ பதிவேட்டினை கொண்டு வருவது நிலவரித்துறை ஆகும். இவர்கள் தான் இதனை வடிவமைப்பர். கிராமத்தின் அல்லது நகரத்தின் பட்டா மாறுதல்கள், பாகப்பிரிவினை, ரீ சர்வே செய்யும் நிலங்கள் என வகைப்படுத்தி ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை வீதம் இதனை புதுப்பிப்பர்.
கேள்விகள்
1. ஒரு கிராமத்தின் அ பதிவேட்டினை பார்க்க வேண்டுமானால் அதனை எவ்வாறு வாங்குவது அல்லது பார்ப்பது ?
Eservices என்கிற இணையதளத்திற்கு சென்று உங்கள் கிராமத்தின் அ பதிவேட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
2. இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்த பதிவேட்டில் நிறைய விஷயங்கள் இல்லை. எனக்கு முழு விவரம் வேண்டும் என்ன செய்வது ?
பொதுவாக இணையத்தளத்தில் அ பதிவேட்டினை தரவிறக்கம் செய்தால் ஒரு சில விஷங்கள் காணாமல் இருக்கும். அதனால் உங்கள் ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அல்லது தாசில்தாரிடம் சென்று கேட்டால் கொடுக்கப்படும் அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறலாம் ( ஒரு பக்கத்திற்கு இரண்டு கட்டணம் வசூல் செய்யப்படும் ).